அம்பகமுவபிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கினிகத்தேனை கெனில்வேர்த் இலக்கம் 02 பிரிவில் நேற்று பிற்பகல் வேளையில் வீசிய பலத்த காற்றினால் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளின் கூரைகள் காற்றினால் சேதமடைந்துள்ளன.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் தற்காலிகமாக தோட்ட பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதேச அமைப்பாளர் சந்தரூவன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சோ. ஸ்ரீதரனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
