சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும்

” கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தாலும், ‘ஆபத்து’ இன்னும் முழுமையாக நீங்கவில்லை. எனவே, சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுங்கள்.” – இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. அதேபோல வைத்தியசாலைகளிலும் நெருக்கடி நிலைமை இல்லை. அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.

எனினும், வைரஸ் பரவலுக்கான ஆபத்து இன்னும் முழுமையாக நீங்கவில்லை. இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டவர்களுக்குகூட ‘டெல்டா’ தொற்றியுள்ளது. எனவே, சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles