முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிப்பதற்கான விசேட சோதனை நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றாமையும் இதற்கு பிரதான காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே சுகாதார நடைமுறைகளை முயயாக பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தும் நோக்கிலும், சுகாதார நடைமுறைகளை பொறுபற்ற விதத்தில் மீறுபவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இன்று முதல் மீண்டும் கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
முதல் கட்டமாக மேல் மாகாணத்தில் இந்த கண்காணிப்பு – சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.