பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போட்டியிட்ட நிலையில், அக்கட்சியின் 14 உறுப்பினர்கள் பாராளுமன்றம் தெரிவாகியுள்ளனர்.
நுவரெலியா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட்டிருந்தாலும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் மட்டுமே ஓர் ஆசனம் கிடைக்கப்பெற்றது.
அத்துடன், சுதந்திரக்கட்சிக்கு ஓர் தேசியப்பட்டியல் வழங்கப்படலாம் எனவும் தெரியவருகின்றது. இதன்படி ரோஹண லக்ஷ்மன் பியதாச அல்லது சுரேன் ராகவன் ஆகிய இருவரில் ஒருவர் பாராளுமன்றம் செல்லக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் விவரம் வருமாறு,
01.மைத்திரிபால சிறிசேன – பொலன்னறுவை – 1,11,137
02.துமிந்த திஸாநாயக்க -அநுராதபுரம் – 75,537
03.மஹிந்த அமரவீர – அம்பாந்தோட்டை – 1,23,730
04.லசந்த அழகியவன்ன – கம்பஹா – 73,061
05.நிமல் சிறிபாலடி சில்வா – பதுளை – 1,41,901
06. சாமர சம்பத் – பதுளை – 66,393
07. தயாசிறி ஜயசேகர- குருணாகலை 1,12,452
08. சாந்த பண்டார – கருணாகலை 52,086
09. ஷான் விஜேலால் – காலி 67,793
10. ரஞ்சித் சிலம்பலாபிட்டிய- கேகாலை 1,03,300
11. துஷ்மந்த – கேகாலை 58,306
12. ஜகத் புஷ்பகுமார – மொனறாகலை 66,176
13. அங்கஜன் ராமநாதன் – யாழ்ப்பாணம் 36,395
14. காதர் மஸ்தான் – வன்னி 13,454