‘சுதந்திரக்கட்சியில் ஜனநாயகம் அழிந்துவிட்டது’ – சந்திரிக்கா சீற்றம்!

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் ஜனநாயகம் என்பது தற்போது அழிக்கப்பட்டுள்ளது.” – என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் கட்சித் தலைமையகம் பத்தரமுல்லையில் இன்று(05) திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு வெளியேறும்போது, சுதந்திரக்கட்சி குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சந்திரிக்கா அம்மையார் இவ்வாறு கூறினார்.

” சுதந்திரக்கட்சியில் தற்போது ஜனநாயகம் இல்லை, சில பைத்தியங்களே கட்சியில் உள்ளன. கொள்கையும் இல்லை, கட்சியுடன் மக்களும் இல்லை. ” எனவும் சந்திரிக்கா சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles