அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்த தரப்புடன் இணைந்தாலும் அது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு தடையாக இருக்காது – என்று இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
ஜே.வி.பியுடன் இணைந்து செயற்பட சுதந்திரக்கட்சி தயாராகவே உள்ளது என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே, மொட்டு கட்சி தரப்பிலிருந்து இந்த பதிலடி வெளியாகியுள்ளது.
” சுபீட்சமான எதிர்காலக் கொள்கையினை செயற்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்கிறோம். கடந்த இரண்டு வருடகாலமாக கொவிட் வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தவும், அதனால் ஏற்படும் சவால்களுக்கு முகங்கொடுக்கவுமே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. இது புரியாமல் சுதந்திரக்கட்சி விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் எவருடன் இணைந்தாலும் அது எமக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.” – என்றும் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டார்.
