சுதந்திரக் கட்சியை ஐ.தே.கவுடன் இணைக்க சூழ்ச்சி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பதற்கு சிலர் சூழ்ச்சி செய்தாலும் அக்கட்சி ஆதரவாளர்கள் இடமளிக்கமாட்டார்கள் என்று சுதந்திரக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு இது சவால் மிகு வருடமாகும். தேர்தல்கள் நடைபெறவுள்ளன. எனவே, சூழ்ச்சிகளுக்கு அடிபணியாது கட்சியை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
சுதந்திரக்கட்சியை யானை வாலுடன் முடிச்சு போடுவதற்கு சிற்சில குழுக்கள் முற்பட்டாலும் அக்கட்சி ஆதரவாளர்கள் அதற்கு இடமளிக்கமாட்டார்கள்.” – என்றார்.

Related Articles

Latest Articles