” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது கிராமங்களுக்கு செல்ல முடிகின்றது. குட்டி தேர்தலில் நிச்சயம் நாம் வெற்றிபெறுவோம்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” வரிசை யுகத்தால் எமக்கு கிராமங்களுக்கு செல்ல முடியாதிருந்தது. தற்போது வரிசை யுகம் இல்லை. உரப்பிரச்சினை இல்லை. சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கவுள்ளது. எனவே, நாடு நெருக்கடியில் இருந்து மீளும். இதனை விரும்பாத சிலரே அரசின் திட்டத்தை சீர்குலைக்க முற்படுகின்றனர்.
தேர்தல் நடந்தால் அதில் நிச்சயம் வெற்றிபெறுவோம்.” – எனவும் அவர் கூறினார்.
