வடக்கு சுமத்திரா தீவுகளில் 6.6 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வடக்கு சுமத்திரா தீவுகளில் இன்று காலை 9.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், எனினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
எனினும், கரையோர பகுதிகளில் வாழும் மக்கள், அடுத்தக்கட்ட அறிவிப்புகள் தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
