சுமந்திரன் பிரதி சபாநாயகர்?

பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்ததையடுத்து பிரதி சபாநாயகர் பதவிக்கு பொருத்தமான நபரை நியமிப்பதற்கான தேர்தல் நடத்தப்படும் என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவை நியமிக்க ஆளும் தரப்பு முன்மொழிந்துள்ள போதிலும்  போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டால் மாத்திரமே அந்த பதவிக்கு தான் வருவதாக  டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பிரதி சபாநாயகர் பதவிக்கான வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகளும் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அப்படியானால் திலான் பெரேரா போட்டியிட மாட்டார்.

இதேவேளை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை குறித்த பதவிக்கு முன்னிறுத்துவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles