நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
” தேர்தல் முடிவடைந்த பின்னர் அரசியல் ரீதியில் சில நியமனங்கள் வழங்கலாம். திணைக்களங்களின் பணிப்பாளர் பதவிகளுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படலாம். ஆனால் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அரசியல் ரீதியான நியமனங்கள் வழங்கப்படக்கூடாது. அவ்வாறு செய்வது ஜனநாயக விரோதச்செயலாகும். அதனையே இந்த அரசாங்கம் செய்துள்ளது. இதன்மூலம் ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.