சுற்றிவளைப்பிற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள்மீது தாக்குதல்: ஐவர் கைது!

தலாவ – சுமுதுகம பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பிற்கு சென்ற தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு(03) கிடைத்த தகவலின் அடிப்படையில் தலாவ சுமுதுகம பகுதியிலுள்ள வீடொன்றுக்கு சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பிற்காக பொலிஸ் அதிகாரிகள் சென்றிருந்தனர்.

இதன்போது, குறித்த வீட்டிலிருந்த மதுபான விற்பனையாளர்கள் உள்ளிட்ட சிலர், ​​பொலிஸ் அதிகாரிகளை தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் வழங்கிய தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும் இன்று(04) தம்புத்தேகம நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

Related Articles

Latest Articles