இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு, இந்தியாவின் முக்கிய நகரங்களில் தொடர்ச்சியான தெரு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. தெரு நிகழ்ச்சிகள் மூலம் இந்தியாவுடன்இணைந்து இரு தரப்பு உறவுகளையும், கலாசாரத்தினை விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கை சுற்றுலாத்துறையினை மேம்படுத்த முடியும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிகழ்ச்சிகள் இன்று (26) முதல் 30 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

முதலாவது நிகழ்ச்சி இன்று புதுடில்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடைபெறும். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 28 ஆம் தேதி மும்பையில் உள்ள செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் நடைபெறுவதுடன் செப்டம்பர் 30 ஆம் திகதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் நடைபெறும். நிகழ்ச்சியுடன் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவடையும்.
இந்த நிகழ்ச்சி மூலம் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்ப்பதற்காக இலங்கை பிரபலங்கள் சனத் ஜெயசூரியா மற்றும் யோஹானி டி சில்வா பங்கேற்க உள்ளனர்.
மேலும் இந்த நிகழ்வுகள் மூலம் பார்வையாளர்களுக்கு அற்புதமான அனுபவத்தையும் மற்றும் இலங்கையின் கலாசாரம் தொடர்பான கவனத்தை ஈர்க்கும் வண்ணம் நடனம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.










