கொரோனா தடுப்பூசிகளை பெற்ற இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், தனிமைப்படுத்தல் நடைமுறையின் பின்னர் நாட்டின் ஏனைய இடங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் குறித்த விபரங்கள் சகல மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார விதிமுறைகளுடன் விருந்தகங்கள், உணவகங்கள் போன்றவற்றுக்குச் செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, மதுவரி ஆணையாளர் நாயகத்தின் அனுமதி பத்திரத்தைக் கொண்ட மதுபானசாலைகள், சுற்றுலாப் பயணிகளுக்கு மதுபானத்தை விநியோகிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.