சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கைக்கு நாளாந்தம் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு நிலை காணப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 1800 வரையில் அதிகரித்து காணப்படுவதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த காலப்பகுதியை கருத்திற் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் தினசரி வருகை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சராசரியாக, நாளொன்றுக்கு சுமார் 2,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவதோடு, இம்மாதத்தில் இதுவரை 27 ஆயிரத்து 213 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ரஷ்ய பிரஜைகள் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles