சு.கவின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமனம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, நிமல் சிறிபாலடி சில்வா தரப்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுதந்திரக்கட்சியின் அரசியல் சபைக்கூட்டம், பதில் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் இன்று கூடியது.
இதன்போதே மேற்படி பதவிக்கு துமிந்த திஸாநாயக்க ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையிலேயே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 

 

Related Articles

Latest Articles