சு.கவின் 9 எம்.பிக்கள் டலசுக்கு ஆதரவு – ஒருவர் எதிர்ப்பு!

புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பின்போது, டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் இன்று மாலை கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 எம்.பிக்களில் ஏற்கனவே நால்வர் அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். சாமர சம்பத் தஸநாயக்க ரணிலை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளார். அந்தவகையில் 9 எம்.பிக்கள் டலசுக்காக வாக்களிக்கவுள்ளனர்.

Related Articles

Latest Articles