சு.க .உறுப்பினர்கள் மூவருக்கு அமைச்சு பதவி

சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் பிரதமருக்கு, கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் கடிதமும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை , ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (16) முற்பகல் நேரில் சந்தித்து, அரசின் வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக கலந்துரையாடவுள்ளனர். அமைச்சு பதவிகளை ஏற்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது.

சுதந்திரக்கட்சியின் சார்பில் நிமல் சிறிபாலடி சில்வா உட்பட மூவருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து, இறுதியானதொரு முடிவை எடுப்பதற்கு சு.கவின் மத்திய குழுவும் இன்று கூடவுள்ளது.

புதிய அரசுக்கு ஆதரவில்லை, அமைச்சு பதவிகள் ஏற்கப்படாது என சுதந்திரக்கட்சி முன்னதாக அறிவித்திருந்தது. எனினும், அக்கட்சியின் எம்.பிக்கள் சிலர் ரணிலை ஆதரிக்க முடிவெடுத்தனர். இதனால் கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட்டது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அரச பங்காளியாவதற்கு சு.க. இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles