அரசாங்கத்துடன் எதிரணிகள் நேருக்கு நேர் மோத வேண்டுமெனில், அது கொள்கை ரீதியிலான போராட்டமாகவே இருக்க வேண்டும். இதனைத் தவிர்த்து, விகாரமகாதேவி பூங்காவில் சூனியம் செய்வது எதிரணிகளை கேலிக்கூத்தாக்கும் என்று மக்கள் போராட்ட முன்னணியின் முக்கியஸ்தரான வசந்த முதலிகே தெரிவித்தார்.
இந்த சூனியப் போராட்டத்தால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மை என்ன? சூனியம் செய்து ஆட்சியை விரட்ட முடியுமென்றால், கோட்டாபய ஆட்சியில் செய்திருக்கலாமே! ஞானசார தேரர் விவகாரத்தைப் பயன்படுத்தி தமக்கு ஒக்சிஜன் கொடுப்பதற்கு ராஜபக்ச தரப்பு முற்படுகிறது. மறுபுறத்தில் அரசாங்கமும் போராட்டம் நடத்துகிறது. இவ்வாறு ஆளுங்கட்சியும் எதிரணிகளும் நாட்டு மக்களுக்கு நகைச்சுவைகளை வழங்கிவருகின்றன எனவும் அவர் கூறினார்.










