இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் இருந்து வெளியேறி மாற்றுக் கட்சியில் செயல்பட்டு வந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கணேசமூர்த்தி இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் இணைந்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கணேசமூர்த்தி,
‘நான் சாதாரண தோட்டத் தொழிலாளியின் மகன். இலங்கைத் தெழரிலாளர் காங்கிரசே எனக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கியது. சாதாரண கணேசமூர்த்தியாக இருந்த எனக்கு கௌரவ மாகாண சபை உறுப்பினர் என்ற அங்கீகாரம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மூலமாகவே கிடைத்தது.
கருத்து முரண்பாடுகள் இருந்ததால், நான் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியில் செயல்பட்டிருந்தேன். ஊவா மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் வடிவேல் சுரேஸ், அரவிந்தகுமார் ஆகியோருடன் கடந்த காலங்களில் இணைந்து பயணித்தேன். ஆனால், அவர்களின் ஆளுமையும், அரசியல் முதிர்ச்சியின் அளவும் மலையகத்தைப் பாதுகாக்க போதாது என்பதை நான் நன்கு உணர்ந்தேன்.
ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் ஆளுமையை, அவரின் மறைவுக்குப் பின்னரே அனைவரும் உணர்கின்றனர். ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் மலையகத்தின் பாதுகாப்பாக மக்கள் உணர்ந்தனர். அவரின் இழப்பு பாரிய இழப்பாகும். எனினும், அவரின் வழிகாட்டலில், ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் ஆளுமையுடன் மிகத் திறமையாக செந்தில் தொண்டமான் பணியாற்றி வருகிறார். மலையகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் செந்தில் தொண்டமானின் கீழ் பணியாற்றுவது முக்கியமானது. செந்தில் தொண்டமானைப் பலப்படுத்துவது மலையகத்தை பலப்படுத்துவதற்கு சமனாகும்.
முரண்பட்ட கருத்துக்களால் கட்சியில் இருந்து வெளியேறினாலும், மலையகத்தின் எதிர்காலத்தை சிந்தத்து மீண்டும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் மீண்டும் இணைந்துகொண்டேன்.