சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) நியமிக்கப்பட்டுள்ளார்.
தோனி அணியில் முக்கிய வீரராக செயற்பட உள்ளார்.
தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றி இருந்தது.
ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை 52 IPL போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கடந்த சில சீசன்களில், கெய்க்வாட் துடுப்பாட்டத்தில் முக்கியமான ஒருவராக திகழ்ந்தார். தோனியின் விலகலுக்கு பிறகு அணியில் முக்கிய பங்கு வகிப்பார் என கருதப்பட்டவர்.
இதனிடையே, கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்ற இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோரும் இம்முறை IPL கிரிக்கட் தொடரில் அணியின் தலைமைத்துவத்திலிருந்து விலகியுள்ளனர்.