செம்மணியில் மேலும் 10 எலும்புக் கூடுகள் அடையாளம்!

 

செம்மணி, சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று சனிக்கிழமை மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் இதுவரை 197 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 180 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 38வது நாளாக நேற்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.

Related Articles

Latest Articles