இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களான கலாநிதி கெஹான் தினுக் குணதிலக, பேராசிரியர் தையமுத்து தனராஜ், பேராசிரியர் பாத்திமா பர்சானா ஹனிபா மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தின் இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் உட்பட எண்மர் அடங்கிய குழு இன்று செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதிக்கு விஜயம் செய்து அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளை அவதானித்தனர்.
இன்று காலை 10 மணியளவில் மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்துக்கு விஜயம் மேற்கொண்ட மேற்படி குழுவினர், அகழ்வுப் பணிகளின் முன்னேற்றம் குறித்து தொல்லியல் பேராசிரியர் ராஐ் சோமதேவ தலையிலான நிபுணர்கள் குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.