செம்மணி மனிதப் புதைகுழி: மீண்டும் இன்று முதல் அகழ்வு!

இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் மீள ஆரம்பமாகவுள்ளன.

யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தின் அபிவிருத்திப் பணிகளின் போது மனித என்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய கடந்த மே மாதம் 15ஆம் திகதி முதல் முதலாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பமாகின.

அந்தப் பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மே மாதம் 17ஆம் திகதி அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டது.

பின் ஜூன் மாதம் இரண்டாம் திகதி மீள ஆரம்பமாகி ஜூன் மாதம் 7ஆம் திகதி யோடு முதலாம் கட்ட அகழ்வுப்பணிகள் நிறைவுக்கு வந்தன.

மொத்தமாக 9 நாள்கள் இடம்பெற்றசெம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப் பணியில் 19 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை 45 நாள்கள் மேற்கொள்வது எனவும், 15 நாள்களுக்கு ஒருமுறை சிறியஇடைநிறுத்தல்களுடன் அகழ்வுப்பணிகளை மேற்கொள்வது எனவும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தீர்மானிக்
கப்பட்டது.

அதன் பிரகாரம் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட முதல் 15 நாள்களுக்கான அகழ்வுப்பணிகள் கடந்த ஜூன் மாதம் 26 தொடக்கம் ஜூலை 10ஆம் திகதிவரை என 15 நாள்கள் தொடர்ச்சியாக நடைபெற்று இடை நிறுத்தப்பட்டது.

முதலாம் கட்ட அகழ்வு மற்றும் இரண் டாம் கட்டத்தின் முதல் 15 நாள்கள் இடம்பெற்ற அகழ்வு என மொத்தமாக24 நாள்கள் இடம்பெற்ற செம்மணிமனிதப் புதைகுழி அகழ்விலிருந்துஇதுவரை 65 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பாடசாலை புத்தகப்பை, சிறுமிகளின் ஆடைகள், பாதனிகள், காற்சங்கிலிகள், சிறிய பிளாஸ்டிக்வளையல்கள், பிளாஸ்டிக் பூமாலைஉட்பட பல்வேறு சான்றுப் பொருள்களும் மீட்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் செம்மணி மனிதப்புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று காலை ஆரம்பமாக வுள்ளமை குறிப்பிடதக்கது.

Related Articles

Latest Articles