யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 54 சான்றுப்பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் முதலாம் கட்டமாக 9 நாட்கள் இடம்பெற்ற அகழ்வு மற்றும் இரண்டாம் கட்டமாக 23 நாட்கள் இடம்பெற்ற அகழ்வில் 54 சான்றுப்பொருட்கள் அடையாளம் காணப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
