செவ்வாய் கிரகத்தில் நீர் : உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள்

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதாக சீனாவின் ஜுராங் ரோவர் விண்கலம் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள மணல் திட்டுக்களை ஆய்வு செய்த போது அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன.

இதனால் அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் ஜுராங் ரோவர் நேரடியாக பனியாகவோ, உறைந்த நிலையிலோ நீரைக் கண்டறியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் உப்பு நிறைந்த குன்றுகளின் மேற்பரப்பில் அடுக்கு நீரேற்றப்பட்ட சல்பேட்டுகள், சிலிக்கா, இரும்பு ஆக்சைடு தாதுக்கள் மற்றும் குளோரைடுகளால் நிறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles