நாவலப்பிட்டிய முதல் பொகவந்தலாவ வரையிலான 54 கிலோ மீற்றர் தூரத்தினை 8 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களில் நடந்து – கடந்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பொகவந்தலாவ சென்மேரீஸ் தேசிய கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் வசந்தகுமார் நிதர்ஷனாவை கல்வி அமைச்சிக்கு அழைத்து , கல்வி இராஜாங்க அமைச்சர் அருணசலம் அரவிந்தகுமார் பாராட்டினை தெரிவித்தார்
குறித்த மாணவிக்கு பாராட்டுக்களை தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் பரீசில்களையும் வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக்கான உபதலைவர் ஸ்ரீநாகவானி ராஜா , சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கான தலைவர் எஸ்.சதீஸ்குமார் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.










