ச.தொ.சவில் களவாடிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

மடவளை பகுதியில் உள்ள சதொச கிளையில் ஆயிரத்து 900 ரூபா பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றார் எனக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 46 வயதான பொலிஸ் கான்ஸடபிள் ஒருவரே சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான கான்ஸ்டபிள் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி மடவளையிலுள்ள, சதொச வர்த்தக நிலையத்துக்கு வந்து ஆயிரத்து 900 ரூபா பெறுமதியான பொருட்களை எடுத்துக்கொண்டு பணம்
செலுத்தாமல் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சதொச வர்த்தக நிலையத்தின் பிரதி முகாமையாளர் சம்பவம் குறித்து வத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் இந்த பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்துள்ளனர்.

Related Articles

Latest Articles