ஜனநாயகத்துக்கான சங்கமம் – எதிர்க்கட்சிகள் ஓரணியில்

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் விசேட கூட்டமொன்று இன்று கொழும்பில் நடைபெற்றது.
மேற்படி இயக்கத்தின் தலைவர் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் திகாம்பரம், ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்ன உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், நாட்டை நல்வழிப்படுத்துவதற்கும் இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles