ஜனநாயக உரிமையை மீறுகிறது அரசு – ஆஸி. தூதுவரிடம் சஜித் சுட்டிக்காட்டு!

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர், போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது.

இதன்போது இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

2024 ஆம் ஆண்டுக்காக தற்போதைய ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பாதீட்டில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆஸ்திரேலிய தூதுவருக்கு எடுத்துரைத்தார்.

அத்துடன், தற்போதைய அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தலை தொடர்ச்சியாக ஒத்திவைத்துள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர், ஆஸ்திரேலிய தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதித் தூதுவர் திருமதி லலிதா கபூர், நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் நிரோஷன் பெரேரா ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

Related Articles

Latest Articles