உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நடத்தப்படும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது.
உள்ளாட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு ஏற்பு இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையிலேயே, தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேவேளை, உள்ளாட்சிமன்ற தேர்தலை இரத்துசெய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுமீதான தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை.
