பொதுத்தேர்தல் ஊடாக ஜனநாயக வழியிலேயே ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சித்துவருகின்றோம் – என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“பொதுத்தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகிவருகின்றோம். வேட்பு மனு தயாரிப்பு பணி தற்போது இடம்பெற்றுவருகின்றது. பொதுச்செயலாளர் தலைமையிலான குழுவொன்றே இதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்கள் எம்முடன் இணைவதற்கு தயார் நிலையில் உள்ளனர். ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே நாம் பொதுத்தேர்தலில் களமிறங்குவோம்.
பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்தில் சாதாரணப் பெரும்பான்மையை எப்படியும் பெறுவோம் என்பதைவிட, ஜனநாயக வழிமுறையில் நாம் வெற்றிபெறுவோம். எப்படியாவது சாதாரணப் பெரும்பான்மை பலத்தை பெறுவோம் எனக் கூறப்படுவது தவறு. பொதுத்தேர்தலில் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது.”- என்றார்.
