அடுத்த அமைச்சரவைக் கூட்டம் 2022 ஜனவரி 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்துக்கு மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

நிதி நிலைமை, கையிருப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தீர்க்கமான முடிவெடுக்கும் நோக்கிலேயே அரச அதிகாரிகளான இவ்விருவரும் அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நெருக்கடி நிலைமையை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என ஒரு சிலரும், மாற்று வழிகளையே கையாள வேண்டும் என மற்றுமொரு தரப்பும் வலியுறுத்திவருவதால் ஐ எம் எவ் விவகாரத்தில் அரசுக்குள் இரட்டை நிலைப்பாடு நிலவிவருகின்றது.
இது தொடர்பிலும் ஆராயப்பட்டு உறுதியான முடிவு எடுக்கப்படலாம் என தெரியவருகின்றது.
