ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சர்வதேச சூழ்ச்சி நடக்கின்றது. அது தொடர்பில் அரசாங்கம் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
” தற்போதைய சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவால் மட்டுமே இந்நாட்டை நிர்வகிக்க முடியும். எனவே, அவருக்கு ஆதரவு வழங்க வேண்டியது கட்டாயம். அதைவிட மாற்றுவழி இல்லை.” எனவும் வெல்கம சுட்டிக்காட்டினார்.
” அரச தலைவரும், அரசாங்கமும் விழிப்பாகவே இருக்க வேண்டும். ஜனாதிபதிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் விதத்தில் சர்வதேச சூழ்ச்சி நடக்கின்றது. இந்த சூழ்ச்சி ரணிலிடம் எடுபடாது என்ற நம்பிக்கை உள்ளது.”எனவும் குமார வெல்கம குறிப்பிட்டார்.










