” 225 பேரின் வாக்குகளை விட நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமை மதிப்புமிக்கது , எனவே, அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைக்காமல், , மக்கள் ஆணை கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால்,முதலில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தி காட்டுங்கள்.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சவால் விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர், 2020 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.அத்துடன், மக்கள் ஆதரவுடன் எந்தவொரு பொறுப்பையும் ஏற்க தயார் எனவும் எதிர்க்கட்சி தலைவர் இடித்துரைத்தார்.