ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தல்! மொட்டு கட்சியின் யோசனை ஏற்கப்படுமா?

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆலோசனை நடத்தியுள்ளது.

இது தொடர்பில் கட்சிக்குள் பலகட்டப் பேச்சுக்கள் கடந்த சில நாள்களாக இடம்பெற்று வருகின்றன என்று அறியமுடிகின்றது.

நாட்டின் அபிப்பிராயத்தைத் துல்லியமாகப் பரிசோதிக்கப் பொதுத் தேர்தலைப் பயன்படுத்த முடியும் எனவும், அதன் பெறுபேற்றின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முடிவெடுக்க வேண்டும் எனவும் பொதுஜன பெரமுனவினர் ஆலோசித்துள்ளனர்.

இந்தக் கலந்துரையாடல்களில் எதிர்வரும் வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

வரவு – செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதற்கான எந்தத் தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை.

அமைச்சரவை மறுசீரமைப்பின் பின்னர் பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சில முறுகல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வரவு – செலவுத் திட்டத்தில் சில அமைச்சுகள் மீதான ஒதுக்கீடுகளை தோற்கடிக்கும் நோக்கில் பொதுஜன பெரமுனவுக்குள் குழுவொன்று செயற்பட்டு வருகின்றது என அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பித்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles