ஜனாதிபதியால் 3 யோசனைகள் முன்வைப்பு! நேற்றிரவு நடந்தது என்ன?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வாக ஜனாதிபதியால் மூன்று யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிரேஷ்ட உறுப்பினர்கள் அமைச்சரவையில் இருந்து விலக, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது முதல் யோசனை.

இதற்கு மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, பந்துல குணவர்தன, காமினி லொகுகே ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும், சரத் வீரசேகர இந்த யோசனையை ஏற்க மறுத்துள்ளார்.

அடுத்தாக பிரதமர் பதவி விலகி, அரசை நடத்துவதற்கான வாய்ப்பை எதிரணிக்கு வழங்குவதல் என்பது இரண்டாவது யோசனையாகும். இந்த யோசனைக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. ஆளுங்கட்சிவசம் 113 என்ற சாதாரண பெரும்பான்மை இருப்பதால் அதற்கான தேவை எழவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

மூன்றாவதாக நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கும் ஆளுங்கட்சியினர் உடன்படவில்லை.

நேற்றைய கூட்டம் இறுதி முடிவு எட்டப்படாமல்தான் நிறைவடைந்துள்ளது. இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles