ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சீன விஜயம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆகியோருடன் ஜனாதிபதியுடன் செல்கின்றனர் எனவும் அவர் கூறினார்.
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீனா செல்வதால், அமைச்சரவையில் எவ்வித அவசர முடிவுகளும் எடுக்கப்படவில்லை. அமைச்சரவை அனுமதி வழங்கிய விடயங்கள் ஏற்கனவே கலந்துரையாடப்பட்ட விடயங்கள். நாம் சீனாவின் ஒரு நாடு கொள்கையை ஏற்றுவருகின்றோம்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
