‘ஜனாதிபதியின் முடிவில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது’

” நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி இடைநிறுத்துவதென்பது சாதாரண நடவடிக்கை. அதில் வேறு நோக்கம் எதுவும் கிடையாது. அரசமைப்பிலுள்ள அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்தியுள்ளார்.” – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முற்பகல் அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது அந்நிய செலாவணி இருப்பு, நிதி நெருக்கடி, கோப் குழுவில் மாற்றம் உள்ளிட்டவற்றை கருத்திற்கொண்டா  ஜனாதிபதி நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தினார் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்துவதற்கான அதிகாரம் அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. 1978 ஆம் ஆண்டுமுதல் இற்றைவரை பதவியிலிருந்த ஜனாதிபதிகள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். எனவே, இது விசேட நடவடிக்கையாக அமையாது. அரசமைப்பின் பிரகாரம் இடம்பெறும் நடவடிக்கை.

நாடாளுமன்றம் கூடும்போது குழுக்கள் மறுசீரமைக்கப்படும். அதேபோல சபை நடவடிக்கைகளையும் உரிய வகையில் முன்னெடுக்க முடியும். எனவே, இந்த இடைநிறுத்தம் தொடர்பான வீண் ஊகங்கள் தேவையற்றது.” – என்றார்.

Related Articles

Latest Articles