ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ள சந்திப்பில் பங்கேற்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய பிரதமரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்கு அரச பங்காளிக்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் தமது கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச, பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஆகியோரை அனுப்புவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
