கொழும்பில் ஜூலை மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தின்போது ஜனாதிபதி மாளிகைக்குள் சென்று ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து படம் எடுத்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தெரணியகல பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர், சமன்புரகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவராவார்.










