ஜனாதிபதி இன்று யாழ். விஜயம்: அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பித்து வைப்பார்!

ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்க இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வருகின்றார். அவர் இங்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளைத் தொடக்கி வைக்கவுள்ளார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்றுஒரு வருட காலம் பூர்த்தியாவதைமுன்னிட்டு தொடங்கப்பட்டுள்ளஅபிவிருத்தித் திட்டங்களின்ஆரம்ப நிகழ்வுக்காகவே அவர்இன்று யாழ்ப்பாணம் வருகின்றார்.

ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலின்படி, இன்று காலை 8.30 மணிக்குமயிலிட்டியில் மீன்பிடித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பார். தொடர்ந்து, காலை 9.30 மணிக்குயாழ். மாவட்ட செயலகத்திள் கடவுச்சீட்டு பணிமனையை ஆரம்பித்து வைப்பார்.

அங்கிருந்து, யாழ். பொது நூலகத்துக்கும் அவர் செல்வார். இதன் பின்னர், மதியம் 1.30 மணியளவில் மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானநிர்மாணப் பணிகளைத் தொடக்கிவைப்பார்.

அத்துடன், வேறு சில நிகழ்வுகளிலும் சந்திப்புக்களிலும் ஜனாதிபதி ஈடுபடுவார்.

இதைத் தொடர்ந்து நாளை செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவுக்குச் செல்லும் ஜனாதிபதி அநுரகுமார,வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்புப்பணியைத் தொடக்கி வைப்பார். அத்துடன், தென்னை முக்கோண வலயப்பணிகளையும் அவர் ஆரம்பித்து வைப்பார்.

Related Articles

Latest Articles