ஜனாதிபதி இன்று விசேட உரை – மகாநாயக்க தேரர்களையும் சந்திக்கிறார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டு மக்களுக்கு இன்று (20) விசேட உரையாற்றவுள்ளார் என அறியமுடிகின்றது.

இவ்வுரையின்போது நாட்டை முடக்குவது தொடர்பிலும், முடக்கத்துக்கு மத்தியில் கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்துவார் என தெரியவருகின்றது.

நாட்டை குறைந்தபட்சம் இரு வாரங்களுக்காவது முடக்குமாறு மகாநாயக்க தேரர்கள், வைத்தியர்கள், சுகாதார தரப்பினர், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், தொழிற்சங்க பிரமுகர்கள் உட்பட பல தரப்பினரும் கோரிக்கை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, நாளை தினம் மகாநாயக்க தேரர்களையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.

Related Articles

Latest Articles