ஜனாதிபதி – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு – சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு இணக்கம்!

” அமைச்சு பதவிகளை ஏற்காது, எதிரணியில் இருந்தவாறு சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் உள்ளிட்டவர்களும் சந்திப்பில் பங்குற்றிருந்தனர்.

சர்வக்கட்சி அரசு மற்றும் சர்வக்கட்சி வேலைத்திட்டம் சம்பந்தமாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறிப்பாக சர்வக்கட்சி அரசில் இணைந்து, அமைச்சு பதவிகளை ஏற்றுமாறு ஜனாதிபதி இதன்போது மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை ஏற்க மறுத்த எதிர்க்கட்சித் தலைவர், சர்வக்கட்சி அரசு அல்லாமல், சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கலாம் எனவும், அமைச்சு பதவிகளை ஏற்பது, மக்கள்மீதான சுமையை அதிகரிக்கும் செயலாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles