ஜனாதிபதி, கூட்டமைப்பு இன்று பேச்சு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிப்புகள் வெளியாகி இருந்தபோதும், அவை நடைபெற்றிருக்கவில்லை.

இந்நிலையில் வடக்கு, கிழக்கில் இடம்பெறுகின்ற காணி சுவீகரிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அண்மையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

அதன்பின்னரே சந்திப்புக்கு நேரம் வழங்கப்பட்டது.

அரசியல் தீர்வு, காணி அபகிரிப்பு, வடக்கு, கிழக்கு அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

Related Articles

Latest Articles