ஜனாதிபதிக்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த சந்திப்பு திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள அரச எதிர்ப்பு போராட்டம் உட்பட மேலும் சில விடயங்களை கருத்திற்கொண்டே மேற்படி சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 25 ஆம் திகதி இந்த சந்திப்பு நடைபெறும் என ஜனாதிபதி தரப்பில் இருந்து, கூட்டமைப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
