ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் தற்போது அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுவருகின்றது.
கொரோனா நெருக்கடி நிலைமை உட்பட நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் இதன்போது விரவாக கலந்துரையாடப்படவுள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேற்படி சந்திப்பு தொடர்பான முழுமையான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.
அதேவேளை, விசேட அறிவிப்பொன்றை விடுத்து, சர்வக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை உடன் கூட்டுமாறு ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
