ஜனாதிபதி செயலாளர் பதவியிலிருந்து பிபீ ஜயசுந்தரவை நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுப்பதற்கு அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.
அமைச்சர்களான சமல் ராஜபக்ச, பந்துல குணவர்தன உட்பட மேலும் சில அமைச்சர்களும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுமே இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளனர்.
இதன் பிரகாரம் ஜனாதிபதி செயலாளர் பதவியில் விரைவில் மாற்றம் வரவுள்ளதெனவும், புதிய ஜனாதிபதி செயலாளராக முன்னாள் அமைச்சரவை செயலாளரான அமரசேகர நியமிக்கப்படவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
அமரசேகர தற்போது தென்னாபிரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக செயற்பட்டுவருகின்றார்.