அமெரிக்காவுக்கு சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ‘கோல்டன் பேஜர்’ ஒன்றை பரிசளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது கடந்த ஆண்டு லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட பேஜர் தாக்குதலை சுட்டும் வகையில் அமைந்துள்ளது.
பரிசை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி ட்ரம்ப், ‘அது சிறந்த ஆபரேஷன்’ என இஸ்ரேலின் லெபனான் பேஜர் தாக்குதலை புகழும் வகையில் கருத்து தெரிவித்ததாக அமெரிக்க ஊடக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், ட்ரம்ப் தரப்பில் புகைப்படம் ஒன்று நெதன்யாகுவுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது. அதில் ‘சிறந்த தலைவர்’ என எழுதப்பட்டுள்ளது.லெபனானில் கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் திகதி ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின என்பது குறிப்பிடத்தக்கது.