ஜனாதிபதி ட்ரம்ப் நரம்பு நோயால் பாதிப்பு

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு விதமான நரம்பு பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு 79 வயதாகிறது.

கடந்த ஜூலை மாதம் நியூ ஜெர்சியில் நடந்த பிபா உலகக் கோப்பை இறுதியாட்டத்தின்போது டிரம்ப்பின் வீங்கிய கால்கள் பத்திரிக்கையாளர்களால் படம்பிடிக்கப்பட்டது.

அதேபோல், வெள்ளை மாளிகையில் பஹ்ரைன் பிரதமருடன் நடந்த சந்திப்பின் போது, அவரது கையில் காயங்கள் இருப்பது போன்ற படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அவரது உடல்நலம் குறித்து விவாதம் எழுந்தது.
இந்த நிலையில், ஜனாதிபதி டிரம்ப்புக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து வெள்ளை மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது.

வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் லீவிட் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,
‘ ஜனாதிபதி டிரம்ப் காலில் ஏற்பட்ட வீக்கத்தை பரிசோதனை செய்ததில் அவருக்கு க்ரானிக் வெனோஸ் இன்சப்பிசியன்ஸ எனப்படும் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை நோய் உலகில் 20ல் ஒருவரை பாதிக்கும்.

கால்களில் இருந்து இதயத்திற்கு ரத்தம் சரியாக திரும்பாததால் இந்தப் பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அடிக்கடி கைகுலுக்குதலால் ஏற்பட்ட திசு சேதம் மற்றும் இதய நோய்தடுப்பு மருந்தான ஆஸ்பிரின் மருந்து பயன்பாடு இதற்கு காரணம்.

கால்களில் உள்ள நரம்புகளுக்கு ரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு செலுத்துவதில் சிரமம் ஏற்படும்போது இந்த நிலை உருவாகிறது. மற்றபடி, தமனி நோய், இதய செயலிழப்பு அல்லது சிறுநீரக பிரச்சினைகள் போன்ற கடுமையான பாதிப்புகள் எதுவும் இல்லை. இந்த நோய் கண்டறியப்பட்டாலும் டிரம்ப்புக்கு எந்த விதமான வலி அல்லது அசவுகரியம் இல்லை.” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles